பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 125 நல்லினி திறமையுந்தான் போரில் பார்த்து விடலாமே!

  • • *

அங்கம்-1 காட்சி-4 (பாண்டியன் அரண்மனையில் தனி அறை. அரசன் சாதாரண இருக்கையில் அமர்ந்துள்ளான். வலப்புறம் அதே உயரத்தில் உள்ள இருக்கையில் மாங்குடி மருதனாரும் இடப்புறம் கல்லாடனாரும் இருக்கின்றனர். அமைச்சன் வீரபாண்டியன் இவர்கள் எதிரே நிற்கின்றான். சேரன் மகளாகிய நல்லினி தந்தையை விடுவிப்பதற்குத் துணிந்து ஒரு சூழ்ச்சி செய்கிறாள். அதன்படியே அவள் வேண்மாள்' என்ற புனைபெயருடன் பாண்டியனைக் காண வருகிறாள். இந்தக் காட்சியில் அவள் வேண்மாள்' என்ற பெயருடன் வரினும், படிப்பவர் மனத்தில் ஐயம் தோன்றாமல் இருப்பதற்காக நல்லினி என்ற பெயரே உரையாடல் கொளுவில் தரப்பட்டுள்ளது) நெ. செ வீரபாண்டியரே, சேர வேந்தர் சிறைப்பட்டு இன்றோடு ஒரு திங்கள் ஆகிறதல்லவா? வீ. பா : ஆம் அரசே, உங்கள் உத்தரவின்படி அவருக்கு ஒரு குறைவும் இல்லாமல் பார்த்து வருகிறோம். ஆனால், அவர் மட்டும் பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார். நெ. செ அமைச்சரே, அவர் கவலை எதனால் என்பை அறிய உம்மாலுமா இயலவில்லை? - வீ. பா : அறிய முடியாமல் என்ன! முன்னர் வேறுவிதமாக எண்ணியிருந்தேன். ஆனால், சென்றவாரத்தில் அவர் கேட்ட கேள்வியிலிருந்து உண்மை உணர்ந்து விட்டேன்.