பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தெள்ளாற்று நந்தி எல்லாம் மண்ணாகப் போக என்று பொருள் தரும் சொல்லுடன் தொடங்குகின்ற இந் நூல் ஏறத்தாழ ஒவ்வொரு பாடலிலும் அறம் வைத்தே பாடப் பெற்றுள்ளது. என்றாலும் தமிழ்ச் சுவையை அறிவதற்கு அறம் வைத்துப் பாடிய பாடல்களைக்கூடக் கேட்டு இன்புற்று உயிரை விட்டவர்கள் இந் நாட்டில் உண்டு என்ற பேருண்மையை அறிவுறுத்துவதற்காகவே இந் நாடகம் எழுந்தது) (நாட்டை) மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய் ஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓர்உருவம் மூன்றுருவ மைவடிவோ வளிவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ செவ்வடிவோ பொன்வடிவோ சிவனேநின் திருமேனி! - (கல்யாணி) திசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம் உயிர் நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம் (துரிதம்) ஊழி நீ உலகு நீ உதவும் நீ, அருவும் நீ ஆழி நீ அமுதம் நீ அறமும் நீ, மறமும் நீ எனவாங்கு, -- (கானடா) ஒரு பெருங் கடவுள் நின் பரவுதும்-எங்கோன் மல்லை வேந்தன் மயிலை காவலன் பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி வடவரை அளவும் தென்பொதியளவும்