பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 3 விடையுடன் மங்கல விசையமும் நடப்ப ஒருபெரும் தனிக்குடை நீழல் அரசுவீற்றி றிருக்க அருளுக எனவே ! (அரசன் யானையில் ஊர்வலம்; போர்க்களப் பின்னணி ஓசை; அவ்வோசையின்மேல் குரல்களின் பேச்சு) குரல் 1 : தெள்ளாறு எறிந்த நந்தித் தொண்டைமான் வாழ்க! பலர் : வாழ்க! வாழ்க!! குரல் 1 : அவனி நாரணன், பல்லவர் கோளரி, நூற்கடல் புலவன், பொலம்பூண் பல்லவன் வாழ்க. பலர் : வாழ்க! வாழ்க!! அமைச்சர் : அரசே, மக்களின் மகிழ்ச்சியைக் கண்டீர்களா? தெள்ளாற்றுப்போர் உலகப் புகழ் அடையப் போகிறது. நந்தித் தொண்டைமான் : அமைச்சரே, எத்தனையோ போர்கள் செய்தோமே? இரட்ட வேந்தன் அமோகவர்ஷனை வென்றோமே. அப்பொழுது கூட இத்தகைய மகிழ்ச்சியடையவில்லையே மக்கள்? அமை : அரசே! இராஷ்டிரகூட வேந்தனுடன் செய்த போர் இவ்வளவு கொடுமையானதன்று மேலும். நந்தி : மேலும் என்ன? அமை : தெள்ளாற்றுப் போரில் பாண்டியன், சோழன் என்ற இருவருமல்லவா தோற்றனர். . . நந்தி : இந்தத் தெள்ளாற்றுப் போரில் நம்முடைய தம்பிகள் இளநந்தியும், நாகநந்தியும் சட்டிய விரத்தைக் கண்டீர்களா?