பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ) தெள்ளாற்று நந்தி அமை : (வெறுப்புக் கலந்த குரலில் கண்டேன் அரசே. ஆனால், எனக்கு அவர்களுடைய அரச பக்தியில் மட்டும் இன்னும் நம்பிக்க ஏற்படவில்லை. நந்தி : இப்போரில் அவர்கள் காட்டிய வீரத்தைக் கண்டுங்கூட ஏன் உமக்கு இந்த ஐயம்? அமை : அரசே என்ன இருந்தாலும். (பின்னணியில், வாழ்க வாழ்க தெள்ளாறு எறிந்த நந்தி வாழ்க’ என்ற ஒலி மிகுதிப்படுகிறது) அரண்மனை சென்று பேசிக்கொள்ளலாம் அரசே, நந்தி : எங்கே நம் தம்பிகள் இளநந்தியையும் நாக நந்தியையும் காணவில்லை? அமை : இதோ வந்துகொண்டு இருக்கிறார்களே! (சற்றுத் தூரத்தில்) இள : (பொறாமையுடன்) தம்பி, நாக நந்தி.ம்..ம்ம். பார்த்தாயா? கேலி மன்னர் பிரானின் வெற்றிவிழா வைபவத்தை தெள்ளாறு எறிந்த நந்தி வாழ்கவாமே? எப்படி இருக்கிறது? நாக : அண்ணா, பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் இந்த ஆட்டு மந்தைகளின் கொம்மாளத்தை தாங்கள் இல்லாவிட்டால் தெள்ளாற்றில் நந்தி தொண்டை மான் வெற்றியா பெற்றிருப்பான்? இள : நாகா. இந்த முட்டாள்களுக்கு நம் நினைவே இல்லையா? - - - நாக : அண்ணா. அப்படிக் கூற என் மனம் - இடிந்தரவில்லை. அற்ப வீரன்கூட இவ்வெற்றிக்கு 'இளநந்திதான் காரணம் என்பதை அறிவானே. இள அறிந்து பயன் என்ன? இப்பொழுது நம் பெயரையா - கூறுகிறார்கள்: நாமும், - இந்த நந்தித் தொண்டை