பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு • 129 ஒற்றன் : (உள்ளே வந்து வணங்கி பாண்டிய மன்னர் நீடுழி வாழ்க! மீணக்கொடியும், வேப்பமாலையும் என்றும் உயர்க! - நெ. செ : சேரநாடு எவ்வாறுள்ளது ஒற்றரே? ஏதாவது படை புறப்பட ஏது இருக்கிறதா? - - ஒற் : அரசே எவ்விதமான அமளியும் இல்லை வஞ்சியில். வஞ்சி, அரசர் இல்லாத நாடு போலவும் இல்லை. அமைச்சர் வில்லவன்கோதையும் இளவரசியார் நல்லினியாரும் நாட்டாட்சியைச் செம்மையாகச் செய்து வருகிறார்கள். - நெ. செ என்ன? நீர்கூறுவது வியப்பாக அல்லவா இருக்கிறது! தம் அரசர் சிறை இருப்பதையும் மறந்து. ஒருவேளை புறத்தில் காணும் இந்த அமைதி. ஒற் : இல்லை அரசே, நீங்கள் நினைப்பதுபோலப் புயலுக்கு முந்திய அமைதி அன்று இது. புயலுக்கு உரிய அடையாளமோ, சூழ்நிலையோ ஒன்றும் இல்லை சேரநாட்டில், நெ. செ : நல்லது, நீர் போகலாம். ஏதேனும் அறிகுறி காணப்படின், உடனே நமக்கு அறிவிக்க வேண்டும், எந்தச் சிறு மாற்றமும் நாம் உடன் அறியவேண்டும். (ஒற்றன் வணங்கி வெளியேறுகிறான். காவலன் உள்ளே வருகிறான்.) - - காவ : அரசே, வாழி! யாரோ ஒர் அம்மையார் வந்திருக் கிறார். பார்த்தால் புலவர்போலத் தோன்றுகிறது! உங்களைக் காணவேண்டும் என்று அறிவிக்கச் சொன்னார். - நெ. செ புலவர் என்றால் உடனே அழைத்துவா, போ. (சேவகன் போகிறான்) -