பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 135 நெ. செ : மருதனாரே, இதை எவ்வாறு நம்புவது? அரிய கவிதை பாடிய இவர் ஒற்றராகவா இருக்க வேண்டும்! என்ன கொடுமை! மா. ம : அம்மையிர், நீவிர் ஒற்றர் என்ற எண்ணம் அரசர் மனத்தில் உண்டாகிவிட்டதே! ஒற்றரல்லீர் என்பதற்குத் தக்க சான்று உண்டா? நல் : மருதனாரே, யானோ ஏழை கவி பாடும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவள். மற்றவர்க்குத் தீங்கு அறியாத கவிஞர் வாழ்க்கையில் ஒற்று அறிதலுக்கு அவசியம் இல்லையே! யான் ஒற்று அல்லேன் என்பதை எங்ங்ணம் விளக்க இயலும்: நெ. செ : புலவரே, இதுவரை எந்தப் புலவரும் கேளாத பரிசில் இது. நல் : அரசரே, சேர வேந்தர் உங்கட்குப் பகைவர். ஆனால், எங்கட்கு அவர் அரசர்தானே? அவரைக் கான வேண்டும் என்னும் விருப்பம் எழுவது தவறா? நெ. செ : ஆனால், என்னிடம் சிறை இருக்கும் ஒருவரைக் காண வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு பொருந்தும்? நல் : அரசே, உங்கள்பால் உண்மையைக் கூறிவிடுகிறேன். எங்கள் அரசரும் கவிதைப் பித்துக் கொண்டவரே. நெ. செ : அதை அறிவேன். அவர் ஐங்குறுநூறு என்ற நூலைத் தொகுப்பித்த பெருமையை யாரே அறியார்? நல் : அடியேனும் அதற்கு ஆகும் உதவியளித்தேன். நீண்ட நாட்களாக அவரைக் காணாமல் என் மனம் வருந்து கிறது. - நெ. செ : மனமாற்றம் குரலில் தெரியும்படி உண்மை. நம் கவிஞரைக் காணாமல் என்னாலும் ஒரு நாள் இருக்க இயலாது. தெ.ந.-10