பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் செழியன் துறவு நல் : அம் மாதிரி ஒன்றும் வேண்டா. ஆனால், அரசர் நான் கேட்பதைத் தர மனம் வருந்துவாரோ என அஞ்சுகிறேன்! நெ. செ : அம்மையிர், நீங்கள் எது விரும்பினும் தருகிறேன். இல்லையென்று சொல்லுதல் தமிழர் வழக்கன்று. அதிலும், புலவர் பாடும் புகழுடைய பாண்டியர், புலவர்க்கு ஒன்று இல்லை என்று கூறுவதினும் உயிரையே விரும்பி விட்டுவிடுவர். நல் : நல்லது! மன்னரே, எங்கள் நாட்டு வேந்தர் உங்கள் பால் சிறை இருக்கிறார் அல்லரோ? நெ. செ : (சில வினாடிகள் ஆழ்ந்த யோசனைக்குப்பின்) ம்மம்.ஆம்! அவரே வலுவில் சண்டைக்கு வந்தார். நல் ஆம்; அவர் தவற்றை நான் அறியாமல் இல்லை. அவரை. நெ. செ : (கவலை தோய்ந்த முகத்துடனும் குரலுடனும்) ஐயோ! அவரை விடுதலை செய்ய வேண்டுமா? நல் : அன்று அரசே, நான் யார் அவர் விடுதலையை உங்களிடம் கேட்க: அஃது அரசியல் சம்பந்தமானது என்பதை யான் அறிவேன். நெ. செ. மிகவும் நல்லது அப்படியானால் அவரைப் பற்றி. - நல் : ஒன்றுமில்லை. அவரைக் கண்டு செல்ல வேண்டும். கண்டு சென்றதாக என் தோழி நல்லினிக்கு அறிவித்தால், அவள் மகிழ்வாள். நெ. செ: ஆ என்ன! நீ ஒற்றர்போலும்! உம் இளவரசியார் தம் தந்தையாருக்குச் செய்தி அனுப்பி உள்ளாரா? நல் இல்லை அரசே இளவரசியாருக்கு நான் வருவது கூடத் தெரியாது.