பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 0 133 நல் : ஆம் அரசே, அவர் பெயர் நல்லினி என்பது தான். எனக்கு அவரோடு ஒரளவு நட்பும் உண்டு. ஆனால், அவர் இளவரசியார்; நான் பரிசில் வாழ்க்கை &_☾öyᏞILMó}ömᎢ . நெ. செ: ஆ! மறந்தே போய்விட்டேன்! உங்கட்குப் பரிசில் வழங்கவேண்டும் என்ற நினைவை அடியோடு மறந்துவிட்டேன்! நூறு ஊர்களும் ஆயிரம் பொன்னும் உங்கட்கு வழங்குகிறேன். நல் : செழிய வேந்தரே, நன்றி கூறுகிறேன். ஆனால் பரிசிலை விரும்பி யான் உங்கள்பால் வரவில்லை. உங்களைக் கண்டு செல்லவேண்டும் என்ற விருப்பால்ேயே நெடுவழிகடந்து வந்தேன். - நெ. செ : புலவரே, உங்கள் அன்பு கைம்மாறு செய்ய இயலாதது எனினும், பரிசில் வழங்காதிருப்பது எனக்குத் தகுதியன்று. - м» நல் : நீங்கள் தரும் இப் பரிசிலை யான் மறுப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்! யான் விரும்பும் ஒன்றை நீங்கள் தருவதாயின். நெ. செ : சேரநாட்டுப் புலவரே, நீங்கள் அஞ்சாது கேட்க லாம். எது விரும்பினாலும் இல்லையென்னாது தருகிறேன். நல் : கேட்ட பிறகு அரசர்பிரானுக்கு அது முடியாத தாயின், என் செய்வது? மா. ம. நீங்கள் கேட்பது பாண்டியர் நெடுஞ்செழியரால் இயலாத ஒன்றாக இருக்க முடியாது. மூன்று உலகத்திலும் உள்ள பொருள் முற்றுங்கொண்டுவர வேண்டினும், எங்கள் அரசர்க்கு ஆகாதது ஒன்றில்லை.