பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 6 செழியன் துறவு நெ. செ : கவிஞரே, யான் கவிதை ஒன்றும் பாடவில்லையே நல் செ. நல் 1Ո[ր: நல் நல் இப்பொழுது: உண்மையை இப்பொழுது தெரிந்து கொண்டதாகக் கூறுவது ஏன்?

கற்பனையின் துணைமட்டும் கொண்டு இப்பாடலை

நான் பாடியதை உடனே அறிந்துவிட்டீர்கள் அல்லவா? ஒரு கவிஞனே இவ் உண்மையைக் காண்டல் கூடும். வாழ்க கவிமன்னரே! நெ : அம்மையிர், நீங்கள் கூறுவது உண்மையானால், அதன் பெருமை இதோ இங்கு வீற்றிருக்கும் கவிஞர் தலைவர் மாங்குடி மருதனாரையே சேரும். கவிஞர் தலைவரே, வணக்கம்! இத்தகைய அரசமாணாக்கரைப் பெற்ற உங்கள் திரு என்றும் வாழ்வதாக! - ம : பெண் குலத்தை விளக்கவந்த பெருந்தகையீர், உமது கவியின்பத்தில் மூழ்கியதால் நீவிர் இன்னார் என்பதை இன்னும் யான் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்!

பெருமானிர் நான் சேரநாட்டைச் சேர்ந்தவள் சேர

நாட்டுக் கவிஞர்பிரானார் குறுங்கோழியூர் கிழாரிடம் பயிலும் கடை மாணவியருள் ஒருத்தி என் பெயர் வேண்மாள் என்பது. நெ. செ : ஆ! சேரநாட்டுக் குறுங்கோழியூர் கிழாரா! இவை என் மனத்தில் சில நினைவுகளை உண்டாக்கு கின்றனவே! . . - -

அரசர் பெருந்தகையீர், அவை என்ன நினைவுகள்?

நெ. செ. : புலவரே, உங்கள் நாட்டு இளவரசியாரது பெயர் நல்லினி என்பதுதானே? உங்கட்கு அவரைத் . தெரியுமோ? அவர் நலமாய் இருக்கிறாரா!