பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 0 131 குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்' நெ. செ : ஆஹா! என்ன அழகு! என்ன சொல் ஆழம்! அருமை! அருமை ! நல் : "உடன்றுமேல் வந்த வம்பமள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே! அவரை அழுந்தப் பற்றி அகல்விகம்பு ஆர்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினும் இலனே." நெ. செ : ஆ: மாங்குடி மருதனாரே, இளங்கவிஞர் தம் பாடலைக் கேட்டீர்களா? மா. மரு : அரசே, தமிழ்க் கவிதையின் சுவையை அனுபவிக்க ஒருவரை அழைக்கவும் வேண்டுமா? இக் கவிஞர் போர்க்களத்தில் நீங்கள் செய்யும் போரை நேரே கண்கூடாகக் கண்டதுபோலப் பாடி உள்ளாரே! - நெ. செ ஆம்: கவிதையைக் கேட்டால், இவர் இந்த அனுபவத்தை நேரே பெற்றவர் போலத்தான் தோன்றுகிறது! ஆனால், இவர் இளமை நாம் நினைப்பது தவறு என்று கூறுகிறது. மேலும் இவர் பெண்பாலார் அல்லரா? - நல் : பாண்டி மன்னரே, நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே! நான் போர்க்களம் புகுந்து நீங்கள் செய்த போரைக் கண்டதில்லை. - நெ. செ : அப்படியானால், உணர்ச்சி நிரம்பிய இக் கவிதையைக்கற்பனையின் துணை மட்டும் கொண்டா இயற்றினர்கள்? நல் : ஆம் மன்னரே, நீங்கள் கவி பாடும் வன்மை உடையவர் என்றும் கேள்விப்பட்டேன். அஃது உண்மை என்பதை இப்போது அறிந்து மகிழ்கிறேன்!