பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 0 143 நல் : அரசே, அது முடியாத காரியம். நமது காதலின் மேல் ஆணை: நான் உறுதியாகத் திரும்பி வருகிறேன்; என் தந்தையார் அனுமதியுடன் மீண்டு வருகிறேன். நெ. செ : அன்பே, நீ வரமாட்டாய் என யான் - சந்தேகிக்கவில்லை. தாய் தந்தையர் அனுமதி பெற்றுத்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தமிழர் மரபு அல்லவே! - நல் : அறிவேன் அரசே, எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றிக் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு படுவதே தமிழர் மண வாழ்க்கை என்பதை நன்கு அறிவேன். நெ. செ : பின்னர் ஏன் திருமணத்தின் முன்னர் ஊர் சென்று வர வேண்டும்? - நல் : அன்பரே, உங்களிடம் மனம் திறந்து பேச உரிமை அற்றவளாய் இருக்கிறேன். ஒரு முறை ஊர் சென்று மீள உத்தரவு தர வேண்டும். நெ. செ : வேண்மாள், ஏதோ என் மனத்தில் ஒரு கலக்கம் ஏற்படுகிறது! நல் : அரசே, அஞ்ச வேண்டா. எக்காரணத்தாலும் நான் வருவது தடைப்படாது. - நெ. செ:அன்பே, என் அன்பிற்குரிய மாங்குடி மருதனாரை ஒரு சொல் கேட்டுவிட்டால் ஓரளவு ஆறுதல் ஏற்படும். அவரைக் கேட்டுவிட்டு உனக்கு விடை தருகிறேன். - - - - நல் ஐயோ! வேண்டா! அவர்கள் நமது காதலை அறிந்தால், நான் யாரென்பதைக் கூற வேண்டும். அந்த இக்கட்டான நிலைக்கு நாம் செல்லவேண்டா. என்மேல் உங்கட்கு நம்பிக்கை பிறக்கவில்லையா இன்னும்?