பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 செழியன் துறவு இ. பொ : அந்தப் பாண்டியப் பதர்தானே நமக்குப் பகைவன்? பகைவன் உயிருடன் இருக்கும் பொழுது நாம் அமைதியாக இருக்க முடியுமா? வி. கோ : அரசே, பகை என்றாலும் காலம் பார்த்து. இ. பொ : ஒருவனை அழிக்கக் காலம் பார்ப்பது எதற்கு? வி. கோ : அந்த ஒருவன் எவ்வளவு படை சூழ இருக்கிறான் என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டாவா? இ. பொ : அறிவு மிகுந்த உமக்கும் நான் கூறுவது விளங்கவில்லையா? வி. கோ : எதைச் சொல்லுகிறீர்கள்? இ. பொ : போர் செய்து அவனை ஒழிக்க நாளாகுமானால், ஏன் வேறு வழியில் அச் செயலை முடிக்கக்கூடாது? வி. கோ : வேறு வழியென்றால். P இ. பொ : (தணிந்த குரலில் வஞ்சகமாக ஏன் அழிக்கக் கூடாது என்கிறேன். வி. கோ : ஆ: அரசே, நீங்களா இவ்வாறு கூறுகிறீர்கள்! இ. பொ : ஏன்? இதில் தவறு என்ன? வி. கோ : ஒரு தமிழன் செய்யும் காரியம் அன்றே இது: இ. பொ : பாண்டியன் நெடுஞ்செழியனை அழித்தே தீரல் வேண்டும்! அது போரால் முடியாது என்றால் வேறு வழி செய்வதில் தவறு என்ன? வி. கோ : ఆIGతో, ఒమితాb உள்ளவரையில் தீராத பழியைத் தேடிக்கொள்வதா? - \. பொ : பழி வாராத முறையில் ஏன் செய்யக்கூடாது?