பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 147 வி. கோ : அரசே பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்றும் கழியக் காதலர் ஆயினும் சான்றோர், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்றும் பெரியோர் கூறுவன நமக்கு அல்லவா? இ. பொ : இவை எல்லாம் எனக்கு இப்பொழுது தேவை இல்லை. என் மனம் இம்முறையில் ஈடுபடத் துணிந்துவிட்டது! வி. கோ : அரசே அமைச்சன் என்ற முறையில் கூற வேண்டுவது என் கடமையல்லவா? நீங்கள் இச் செயலில் ஈடுபடுவதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கமுடியாததற்கு வருந்துகிறேன்! இ. பொ : என்ன வில்லவன் கோதை! என் கருத்துக்கு நீர் உடன்படவில்லையானால் நீர் வெளியே இருப்பதே தீமை. ஆகவே, உம்மைச் சிறையில் வைக்கப் போகிறேன். நான் நினைத்தது முடியும் வரை நீர் சிறையில் இருக்கவேண்டும். நல் : (நல்லினி உள்ளே நுழைந்து யார் அப்பா சிறையில் இருக்கவேண்டும்? ஏன்? - இ. பொ : வா, வா, என் கண்ணே உன் உடல் நிலை நன்றாய் இருக்கிறதா? அந்தக் கயவர்களிடமிருந்து நீ தப்பிவந்த பின் உடல்நிலையைப்பற்றியதே என் கவலை எல்லாம். - நல் : அவர்கள் கயவர்கள் அல்லர் அப்பா; மனிதரை மனிதராக நினைத்து நடத்தும் தமிழ்ப் பண்பு நிரம்பியவர்கள். . - . - இ. பொ : கோபமான குரலில் நல்லினி, நீயுமா அவர்கள் புகழைப் பாடத் தொடங்கிவிட்டாய்? 1. புறம், 182. 2. அகம், 12.