பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 செழியன் துறவு நற்சோ : சிந்தித்தேன் அரசே! இன்னும் என் மனம் உறுதி பெறவில்லை. தமிழ்ப் பெண் ஒருத்தி இத்தகைய இழிசெயலைச் செய்ய முற்படுவது உலகு உள்ளவரை பழி தேடிக்கொள்வதாகும். இ. பொ : எனக்கு அறவுரை கூற அமைச்சர் பலர் இருக் கின்றனர். நீ அச் செயலில் ஈடுபடவேண்டா. இஃது என் ஆணை. நாளைக் காலையில் நீ மதுரைக்குப் புறப்பட வேண்டும். உடனே செல்க. நற்சோ , ஆணையின் வண்ணம் சென்று வருகிறேன் அரசே! (வெளியே சென்று காவலனிடம் மெல்லப் பேசுகிறாள்) காவல, இளவரசியார் எங்கு உள்ளார்? காவலன் : அம்மா, அவர் வேனிற்கால வீட்டில் உள்ளார். நற்சோ : நல்லது! அரசரிடம் யான் இளவரசியாரைப் பார்க்கப் போவதாகக் கூறவேண்டா. - காவலன் நல்லது தாயே! அங்கம்-II காட்சி-4 (மதுரையில் பாண்டியன் அவை. அரசனும் புலவர் மாங்குடி மருதனாரும் சம உயரமான இடத்தில் இருக்க, அமைச்சன் வீரபாண்டியன் முதலியவர் வலப்புறம் இருக்க காவலர் பலர் இடப்புறம் சூழ்ந்து நிற்க, இடையே அகன்ற இடத்தில் நற்சோணையின் நாட்டியம் நடை பெறுகிறது. அவளுக்கு வயது இருபதுக்குள் இருக்கும். சேரநாட்டு அழகுடன் நல்ல நாட்டியப் பயிற்சியும் காணப் படுகின்றது. நாட்டிய இசை பழைய கருநாடக இசையாயிருக்கிறது. கூடுமானவரை பாடல் ஒன்றும் இல்லாமல் ஸ்வர ஜதி அல்லது அலாரிப்பாக நிகழ்கிறது. நாட்டிய முடிவில் உரையாடல் தொடங்குகிறது)