பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 9 151 நெ. செ : கவிஞர்பிரானாரே, இவ்வளவு அழகாக நாட்டியம் ஆடிய இப் பெண்மணிக்கு என்ன பரிசில் தரலாம்? மா. மரு : அரசே, நீங்கள் விரும்பும் எதுவும் தரலாம்! இது சிறந்த நாட்டியம் என்பதற்கு ஐயம் இல்லை. நெ. செ நற்சோணை, உனக்குப் பதினாயிரம் பொன் பரிசிலாகத் தந்துள்ளேன். ஏற்றுக்கொள். நற்சோ : அரசே, நான் உங்கள் அன்பை நாடி வந்தேனே தவிரப் பரிசிலை நாடி வரவில்லை. உங்களைத் தனியே கண்டு சில பேசவேண்டும். நெ. செ : என்னிடம் தனியாகப் பேசவேண்டுமா? இருவரும் தனியே ஒர் அறைக்குள் வருகின்றனர்) என்ன பேசவேண்டும் என்பதை உடனே கூறுக. நற்சோ : அரசே, நான் உங்கள் காதலி வேண்மாளிடமிருந்து வருகிறேன். நெ. செ ஆ! அப்படியா! ஏன் அவள் இன்னும் வரவில்லை? அவளைக் காணாமல் நான் படும்பாட்டை அவள் அறியாளா? யார் அவளை. வரவொட்டாமல் தடுப்பவர்? நற்சோ : மன்னர் மன்னரே, அவள் முதலில் இந்தப் பாடலை உங்களிடம் தருமாறு எழுதித் தந்தாள். (ஒர் ஒலைச்சுருளைத் தருகிறாள்) நெ. செ : ஆ என் கண்மணி கவிதை புனைவதில் நிகரற்றவளல்லவா! என்ன கவிதை: சாவேரி இராகத்தில் உரக்கப் படிக்கிறான். 'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று - நீரினும் ஆரள வின்றே சாரல் தெ.ந.-11