பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 * செழியன் துறவு கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' ஆ! எவ்வளவு அருமையாகத் தனது காதலை வெளி யிட்டுள்ளாள்! நற்சோ : அரசே, இன்னும் ஒன்று. சேரநாட்டிலிருந்து எந்தப் பரிசிலை யார் கொண்டு வந்தாலும் அதனை ஏற்காமல் ஒதுக்கிவிடுமாறு உங்களை வேண்டிக் கொண்டாள். - . நெ. செ : சரி ೧uTಡಿ!T, அவள் யாரென்பதை இன்னும் அறியாமல் இருப்பது சரியா? அவள் யாரென்பதை நீதான் தெரிவிக்கக்கூடாதா? நற்சோ : அரசே, மன்னித்தருள்க! அவள் உங்களிடம் உயிரையே வைத்திருக்கிறாள் என்பதைத் தவிர, வேறு ஒன்றும் கூற முடியாத நிலையில் இருக்கிறேன்! நெ. செ : இன்னும் எத்தனை நாள் நான் காத்திருப்பது? நற்சோ : அவள் விரைவிலே வந்து சேருவதாகச் சொல்லச் சொன்னாள். * . . . நெ செ : நீ சென்று என் நிலையை அவட்குக் கூறுக; விரைவில் வருமாறு சொல்க, சென்றுவருக! அங்கம்-II காட்சி-5 (சேரன் அரண்மனையில் தனி அறை. சேரன் கடு கடுத்த முகத்துடன் கண்களில் கோபக்கனல் வீச அமர்ந்துள்ளான். நற்சோணை அக் கோபத்திற்குச் சற்றும் கலங்காமல் நின்றுகொண்டிருக்கிறாள்) இரும்பொறை : நற்சோணை, நமது ஆணையை நிறைவேற்றினாயா? 1. குறுந்தொகை, 3