பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 153 நற்சோ : இல்லை அரசே அவர் திருமுன்னர்ச் செல்வதும் இயலாததாகிவிட்டது! என்செய்வேன்! இ. பொ : தெரியும் எனக்கு! நீ கூறுவது பெரும்பொய்! என் ஒற்றர்கள் உனது செயல் முழுவதையும் கண்காணித்து உனக்கு முன்னரே வந்து செய்தி அறிவித்துவிட்டனர். நற்சோ : ஆ ஒற்றரா? என் செயலைக் காண ஒற்றரை ஏவினர்களா? நல்லது! என் செயலைத்தான் அறிந்து கொண்டீர்களே! இனி எது வேண்டுமாயினும் செய்யலாம். 翠 இ. பொ : பாண்டியனைத் தனியே அழைத்து யாது கூறினாய்? - . - (நற்சோணை ஒன்றும் பேசாது நிற்கிறாள்) இ. பொ : ஏன் பேசாதிருக்கிறாய்? சொல்லு: நற்சோ : அரசே என் உடம்புதான் உங்கட்கு அடிமையே தவிர, என் உயிர் அடிமையன்று. அஃது இறைவனுக் குரியது. நீங்கள் அதை ஒன்றுஞ்செய்ய இயலாது. இ. பொ : நீ அவனிடம் தனியே கூறியது என்ன? நற்சோ : நான் அதைக் கூறமுடியாதவளாய் இருக்கிறேன். நீங்கள் என்னைக் கொன்றாலும் அது பற்றிக் கூறமாட்டேன்! - ‘. . . . ; . பொ : நாட்டின் கேட்டுக்கு வழி தேடிய உன்னை என்ன to- கு தடி - செய்தால் தகாது! . . . . . . . . - - -. நற்சோ : அரசே, நாட்டின் பாதுகாவலுக்கோ, நலத்துக்கோ, ஒரு சிறிதும் யான் தீங்கு இழைக்க வில்லை என்பதைமட்டும் உறுதியாகக் கூறுகிறேன். . . இ. பொ : இப்பொழுது உண்மையைக் கூறாவிட்டால் உன்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தப் போகிறேன்! !" . , , .