பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ல் செழியன் துறவு நற்சோ : சிறைக்கு மட்டுமன்றி, சித்திரவதைக்கே அனுப்பினும் சரி! என் வேலை முடிந்துவிட்டது! நான் மகிழ்ச்சியுடன் செல்கிறேன்! குற்றமற்ற ஒரு பெண்ணைத் தண்டித்த பழிதான் உங்களைச் சாரும். (வாயிற்காவலன் வருகிறான்) வாயிற்காவலன் : அரசே வாழ்க! சோழ நாட்டிலிருந்துசோழர் பெருநற்கிள்ளியிடமிருந்து தூதுவர் வந்துள்ளார். உடனே உங்களைக் காண வேண்டும் என்கிறார். இ. பொ : இவளை அழைத்துச்சென்று சிறையிலிட்டு விட்டு, உடனே அவரை அழைத்துவா. (வாயிற் காவலன் நற்சோணையுடன் செல்கிறான். சோழன் தூதுவன் வருகிறான்) இ. பொ வருக! வருக! சோணாட்டின் துதுவரே, வருக! தும் வரவு நல்வரவாகுக! சோழர் பெருநற்கிள்ளி நலந்தானே? - தூது : சேர மன்னரே, வணக்கம்! சோழ மன்னர் தமது அன்பை உங்களுக்குத் தெரிவிக்க உத்தரவு இட்டுள்ளார். இந்தப் பரிசில்களை அவர் அன்பிற்கு அடையாளமாக ஏற்றருள்க! (பணியாளர் நால்வர் பரிசில்களைச் சுமந்து வந்து உள் வைத்து, வணங்கி வெளியேறுகின்றனர்) இ. பொ : நல்லது! எனது அழைப்பிற்கு இணங்கி உடனே - உம்மை அனுப்பியதற்கு எனது நன்றி உரியதாகுக! யார் அங்கே? காவ அரசே ஆணை என்ன? இ. பொ : இந்தப் பரிசில்களை உள்ளே எடுத்துவை. நமது ஆணை இன்றி யாரையும் உள்ளே விடாதேஇளவரசி நல்லினியைக்கூட-தெரிகிறதா?