பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 155 காவ : ஆணை அரசே! இ. பொ : தூதுவரே, உம்மை அழைத்ததன் காரணம் அறிந்தீரா? - தூது : அரசே, அதுபற்றிச் சிந்திக்க நேரமில்லை. உடனே வரவேண்டும் என்ற உங்கள் ஒலையைக் கண்டவுடன், சோழர் வேறு ஆராயாமல் என்னை அனுப்பினார். இ. பொ : சரி! அப்படியாயின், பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றி உம் மன்னர் என்ன நினைக்கிறார்? - தூது : எம் மன்னர் என்ன நினைக்கிறார் என்பதை நான் எவ்வாறு கூறமுடியும்? இ. பொ : தூதுவரே, வன்மையுடன் வார்த்தையாட இது நேரமன்று! நான் பாண்டியனை முழுமனத்துடன் பகைக்கிறேன்; வெறுக்கவுஞ் செய்கிறேன். தூது : அது தெரியாத ஒன்று அன்றே? நீங்களே அவருடன் போரிட்டீர்களே? - இ. பொ : அந்தப் போரில் நான் தோற்றுப்போனது பற்றி உம் அரசர் என்ன நினைக்கிறார்? தூது அவர் மிகவும் வருந்தினார்: சிறிது அவசரப்பட்டு, காலம், இடம், சூழ்நிலை பாராமல் நீங்கள் போரில் இறங்கிவிட்டதாக அப்பொழுது கருதினார். இ. பொ : சரி. இப்பொழுது காலம், இடம், சூழ்நிலை முதலியவற்றை நன்கு சிந்தித்துப் போர் செய்யலாம் என நினைக்கிறேன். - தூது . நன்றாகச் செய்யுங்கள்! யார் உங்களைத் தடை செய்ய முடியும்? -