பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 செழியன் துறவு இ. பொ : இது கூறுவதற்காகவா உம்மை அவ்வளவு நீண்ட தூரத்திலிருந்து மலைநாட்டுக்கு அழைத்தேன்? துTது : விளங்கவில்லை அரசே! நீங்கள் கூறுவதை விளக்கிக் கூறுதல் நல்லது. இ. பொ : இனியும் மறைமுகமாகப் பேசுவதில் பயனில்லை. நேரடியாகக் கூறினால் நீர் தவறாக நினைக்க மாட்டீரே? தூது : சேரவேந்தரே, மிகவும் முக்கியமான காரியம் என்று நீங்கள் எழுதியிருந்ததாலேதான் எங்கள் அரசர் என்னை அனுப்பினார். நீங்கள் நேரடியாக எந்த மறை பொருளையும் பேசலாம். இ. பொ: நான் பாண்டியன்மேல் படையெடுத்தால் சோழர் உதவிக்கு வருவாரா? தூது : வருவார் என்றே நினைக்கிறேன். நீங்கள் விரும்பினால் இது நடைபெறும். இ. பொ : சென்ற முறையிலேயே இது செய்யாமற் போனது என் பெருந்தவறு. போனது போகட்டும்! உறுதியாக அவர் வருவாரா? தூது : உறுதியாக வருவார். போருக்குப் பிறகு வையை ஆற்றின் வடபகுதி முழுதும் எங்கட்கு வந்துவிட வேண்டும். இதற்கு நீங்கள் உடன்படுவதாயின். இ. பொ : சரி, அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறகு. தூது : இதற்கு நீங்கள் உடன்படுவதால் மற்றவை எளிதில் தீர்ந்துவிடும். எப்பொழுது புறப்படுவதாக நினைவு? இ. பொ வருகிற முழுமதி நாளன்று போர் தொடங்கி விடவேண்டும். உங்கட்கு இது முடியுமா?