பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 செழியன் துறவு நல் : அரசருடன் பேசிக்கொண்டிருப்பவர் யார்? வி. கோ : அம்மையிர், அவர் சோழனுக்கு அந்தரங்கத்துரதர். நல் : நம் பகைவராகிய சோழர்தம் அந்தரங்கத் துரதருக்கு இங்கு என்ன அலுவலாம்? - வி. கோ : நம் அரசரது அழைப்பின்மேல் வந்துள்ளார். நல் : அழைப்பு அனுப்பவேண்டிய அவசரம் என்ன? வி. கோ : சில நாட்களாகவே வேற்றரசர்களின் அந்தரங்கத் துரதர்கள் இங்கு வந்து போகின்றார்கள். நல் : அமைச்சராகிய உம்மையும் கேளாது என்ன சூழ்ச்சி செய்கிறார் அரசர்? - வி. கோ : என்னை அவர் கேளாவி ம், நடப்பு டிலு இ! எனக்குத் தெரியாமல் இல்லை. நல் : உம்மைப்போலவே நானும் அரசர் வெறுப்புக்கு ஆளாகிவிட்டேன்! இருவரும் ஒரே காரணத்தால் வெறுக்கப்பட்டது விந்தையே! வி. கோ : இளவரசியீர், நம் அரசர் மீட்டும் பாண் ந L4நாட்டின்மீது படை எடுக்கப்போகிறார். நல் : ஆ! என்ன! மறுபடியுமா? ஏன் தந்தையாருக்கு இந்த அறிவீனம்: அவர் குணக் குன்றாகிய பாண்டியரை ஏன் இவ்வாறு வெறுக்கிறார்? வி. கோ : அதற்காகத் தம் பகைவனாகிய சோழனையும் நட்பாக்கிக் கொள்கிறார். இது வியப்பல்லவா? நல் : அமைச்சரே, இதை எப்படியும் பாண்டி மன்னருக்கு நான் தெரிவிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்? வி. கோ : நான் என்ன சொல்வது அம்மா? நீங்கள் விரும் பியதைச் செய்யுங்கள். நல் : நீங்கள் இதில் உதவி செய்ய முடியுமா?