பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 159 வி. கோ : நீங்களாகச் செய்வதுதான் நல்லது. நான் செய்தால் பயன்படாது போவதோடு, அது தீங்காகவும் முடியும். . நல் : அப்படியானால், நானே பாண்டியருக்கு இதனை அறிவிக்கிறேன். - (இரும்பொறை உள்ளே நுழைகிறான்) இ. பொ : எதை அறிவிக்கப்போகிறாய் மகளே? நல் : ஆ! அப்பா, எப்பொழுது இங்கே வந்தீர்கள்? இ. பொ ஏன்? பயமா இருக்கிறதா? பாண்டியப் பதருக்கு நான் படையெடுக்கப் போவதை அறிவிக்க நீ வில்லவன் கோதையைக் கெஞ்சின பொழுதே வந்துவிட்டேன். : நல் : ஏன் அப்பா உங்கட்கு இந்த மனநிலை? பழைய பகைவனாகிய சோழனையும் நட்பாக்கி, ஒரு பாவமும் அறியாத பாண்டியர்மேல் ஏன் படை எடுக்க வேண்டும்? இ. பொ : இந்த அரசியல் தொல்லைகளில் நீ தலையிட வேண்டா. இது கிடக்கட்டும்; பாண்டியனிடம் உனக்கு ஏன் இவ்வளவு பற்று என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. நல் : உங்கட்கு ஏன் அவரிடம் இவ்வளவு பகைமை: - இ. பொ : சரி சரி! உன்னுடன் பேச எனக்கு நேரமில்லை. நீ யாரையாவது அனுப்புவது தெரிந்தால், என் கோபம் எல்லை கடந்துவிடும்! பெற்ற தந்தைக்குத் தீங்கு இழைக்காதே நல்லினி! நான் போய் வருகிறேன். - இரும்பொறை வெளியேறுகிறாள்)