பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 செழியன் துறவு நல் : ஈதென்ன கொடுமை? நான் ஒன்றுமே செய்ய இயலாது போலத் தோன்றுகிறதே! - வி. கோ ஆம் அம்மணி. இனி ஆள் அனுப்பும் எண்ணத்தை அறவே விட்டுவிட வேண்டுவதுதான். நல் சரி, ஆள் அனுப்ப முடியாது. ஆனால். வி. கோ : என்ன அம்மா ஆனால் என்கிறீர்களே? என்ன நினைவு? - நல் : ஒன்றுமில்லை, நான் சென்று வருகிறேன். அங்கம்-II காட்சி-6 (பாண்டியன் அரண்மனையில் தனி அறை. அரசனும் புலவர் மாங்குடி மருதனாரும் எதிர் எதிராய் அமர்ந்து உரையாடுகின்றனர். அரசனுக்கு இடப்புறம் அமைச்சன் நிற்கிறான். இந் நிலையில் வாயிற்காவலன் உள்ளே வருகிறான்) - காவலன் : அரசரே, ஒற்றன் ஒருவன் குதிரைமேல் வந்துள்ளான். மிக்க அவசரமாம். உங்களைக் காண வேண்டுமாம். நெ. செ : சரி, வரச்சொல். - (ஒற்றன் வருகிறான்) ஒற்றன் : செழிய வேந்தரே, வணக்கம்! (விழுந்து வணங்குகிறான்) நெ. செ : ஏன் இவ்வளவு அவசரம்? - ஒற்றன் : அரசரே, தலையாலங்கானம் நோக்கிச் சேரர், சோழர் இருவருடன் சிற்றரசர் பலர் படையும் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. நெ. செ : என்ன சொல்கிறாய் நீ? சேரநாடு எங்கே, சோழன் எங்கே? இருவரும் போரிடுகின்றனரா?