பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 161 ஒற்றன் : இல்லை அரசரே! இருவருஞ்சேர்ந்து தலையாலங் கானம் நோக்கி வருகின்றனர். நாளை மறு நாட் காலையில் அவ்வூரினுள் நுழைந்துவிடுவார்கள். நெ. செ வீரபாண்டியரே, நம் ஒற்றர்கள் ஏன் இதுவரை சேர நாட்டிலிருந்து ஒரு தகவலும் அனுப்பவில்லை? வீரபாண் : அரசே, சேர நாட்டில் நம் தலைமை ஒற்றர் பிடித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்று காலைதான் கிடைத்தது. . நெ. செ : என்ன கொடுமை! உம்! அமைச்சரே, தலையாலங்கானக் கோட்டையை நன்கு பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளை விரைவில் செய்யும். ஒற்றனே, பாண்டி நாடு உனக்குக் கடமைப்பட்டுளது. நீ செல்லலாம். வீ. பா : அவ்வாறே செய்கிறேன். (அமைச்சனும் ஒற்றனும் போகின்றனர்) நெ. செ : புலவர் மணியே, என்ன நினைக்கிறீர்கள்? இச் சேரனை விட்டது தவறு என்று அன்றே கூறினர்கள். நான் பெருந் தவறு செய்துவிட்டேன். மா. மரு : அரசே, அதுபற்றி இப்பொழுது வருந்துவதால் பயனில்லை. 'என் செய்தோம் என்று வருந்தும் படியான காரியத்தைச் செய்யக் கூடாது. தவறிச் செய்துவிட்டால், பிறகு ஏன் செய்தோம் என்று கவலைப்படுவது அதனினும் தவறு" என்று அறநூல் கூறுவது தாம் அறியாததா? நெ. செ மற்றவை போகட்டும்; வேண்மாள் ஏன் சும்மா இருந்துவிட்டாள்? மா. மரு : அரசரே, மன்னிக்கவேண்டும். அந்த வஞ்சியாளைப்பற்றி எனக்கு எப்பொழுதுமே நல்லெண்ணம் இல்லை. w - 1. எற்று என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்று அன்ன் செய்ய்ாமை நன்று (குறள், 655)