பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 செழியன் துறவு நெ. செ : புலவரே, என் மனம் இன்னும் அவளைச் சந்தேகிக்கவில்லை. நாட்டியமாடும் நற்சோணை யிடமும் சில செய்திகள் கூறி அனுப்பினாளே! மா. மரு : அப்படியானால், பெரிய இந்தப் படையெடுப்புச் செய்தியை ஏன் சொல்லியனுப்பவில்லை? நெ. செ அதுதான் எனக்கும் வியப்பாய் இருக்கிறது! ஒருவேளை, ஏழைப் பெண்ணாகிய அவளுக்குச் செய்தி அனுப்ப வசதிகள் இல்லாமல் போயிருக்கலாம். மா. மரு : அப்படி உண்மை அன்பு உடையவளாயின், அவளே நேரில் வந்திருக்கலாமே? மேலும், அவள் அரண்மனை உளவுகள் தெரிந்தவள் போலத் தெரிகிறதே! நெ. செ : அஃது எப்படித் தெரியும்? மா. மரு : அல்லாவிடில் நாட்டியக்காரியிடம் கூறி அனுப்பிய செய்திகள் அவளுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? நெ. செ ஆம்! அப்படியானால், அவள் ஏன் இப்பொழுது செய்தி அனுப்பவில்லை? மா. மரு. அதனாலேதான் அரசே அவளை நம்புவதில் - பயனில்லை என்று அன்றே கூறினேன். நெ. செ : இருந்தாலும், அவளை மறக்க இயலாது. என் மனம் அவள் மேல் ஐயம் கொள்ள மறுக்கிறது. மா. மரு : மனம் மறுக்கலாம். ஆனால், அறிவு அவள்மீது தவறு காண்கிறதே! என்ன செய்வது! நெ. செ : புலவரே, அவளுக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு அறிவால் ஆகியது அன்று; உணர்ச்சியால் ஆகியது. ஆகவே, இந்த நிலையில் என் மனத்தையே நான் நம்புகிறேன். - - - -