பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 163 மா. மரு : அரசே, மனத்தை நம்பியதால் கிடைத்த Lರ್u இதுதான். இனியாவது அவளைப்பற்றிய நினைவை விட்டு ஒழியுங்கள். நெ. செ : அஃது இயலாக் காரியம். அவளை மறந்தால் எனக்கு வாழ்வு இல்லை. அவள் எப்படியும் வந்து சேருவாள் என்ற உறுதிமட்டும் இருக்கிறது. காவலன் : அரசரே ஒற்றன் ஒருவனை அமைச்சர் அழைத்து வந்துள்ளார். நெ. செ வருக வீரபாண்டியரே! இப்பொழுது வந்த செய்தி என்ன ? - வீ. பா : பகைப்படைகள் தலையாலங்கானத்தை நெருங்கி விட்டனவாம். நெ. செ : சேரனோடு சேர்ந்த துணைவர் யார் யாராம்? வீ. பா : சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் அறுவராம். நெ. செ : ஆ: எலிகள் பல ஒன்றாகச் சேர்ந்தாலும் நாகம் பெருமூச்சு விட்டாலே அழிந்துவிடும் அல்லவா? மா. மரு : அரசே, பகைவரைக் குறைத்து மதிக்கும் பிழையை நாம் செய்யக் கூடாது. நெ. செ : கவிஞர்பிரானீர், நாம் குறைத்து மதிக்கக் கூடாது தான். ஆனால், அதிகமாக மதித்துக் கொண்டு நாம் ஏன் அவதிப்பட வேண்டும்? - வீ. பா : பகைவர் எழுவர் என்பதை நினைவில் கொண்டு நாம் படை திரட்ட வேண்டும். நெ. செ அமைச்சரே, கணக்கிட வேண்டுமானால், எழுவர் என்று கூறலாம். ஆனால், பெரிய வேந்தர் இருவர் தவிர, ஏனையோர் ஐவரும் சிற்றரசர் தாமே? - வீ. பா : ஆம் அரசே! -