பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 167 சோழ : நீங்கள் பாண்டியரோடு சண்டையிட்டு அனுபவம் பெற்றவராயிற்றே! அவர்கள் பலவீனம் எதுவென்பது தெரியாதா? சேர : அந்தப் பாண்டியனுக்குப் பலவீனம் என்பதே இல்லை. சோழ : ஆ! வயதால் சிறியவன் எத்தகைய போர் செய்கிறான்! இவன் போர்த் திறமையைக் காண்பதற்காகவாவது நாம் படை கொண்டு வந்தது நல்லதாயிற்று! அங்கம்-III காட்சி-2 . (அதே போர்க்களத்தின் மற்றொரு பகுதி. அங்கு அமைதி நிலவுகிறது. மாங்குடி மருதனார், கல்லாடனார் இருவரும் போர் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு பேசுகின்றனர்) மா. மரு : ஆ! கல்லாடனாரே, பார்த்தீர்களா நம்மரசர் போர்த்திறனை? ஒருவர் எழுவரை எதிர்த்துப் போர் செய்யும் விந்தை நாம் கண்டதுமில்லை கேட்டதுமில்லை! கல்லா : மருதனாரே, போர் செய்வதற்கென்றே பிறந்த மானவீரர் நம் பாண்டி மன்னர்-சூரியன் முன் பணி போல, புலி முன் மான் போல, எலி முன் நாகம் போல. . மா. மரு என்ன புலவரே, உவமைகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே செல்கிறீரே! கல்லா இல்லை. இந்தப் பகைப்படை உடைந்து . ஒடுவதையும் நம் அரசர் போர்த்திறனையும் கண்டால், இந்த உவமைகள்கூடப் போதாவெனத் தோன்றுகின்றது! - தெ.ந.-12