பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 செழியன் துறவு ԼՈfT. ԼՈ கல்லா L[}#f. L# கல்லா ரு : புலவரே, எங்கும் தமிழர் மயம்! இருபக்கத்துப் படைஞரும் தமிழர்; கொல்வோரும் தமிழர், கொல்லப்படுவோரும் தமிழர். ஈதென்ன கொடுமை!

மருதனாரே, இதில் என்ன கொடுமை இருக்கிறது? பகைவர்களை அழிக்கிறோம் என்றால், அதில் மகிழ்ச்சி அல்லவா அடையவேண்டும்?

ரு : யார் யாருக்குப் பகைவர்? தமிழர் தமிழருக்குப் பகைவரா? நம்ப முடியவில்லையே! தமிழ் நாட்டுக்கு இத்தகைய ஒரு காலம் வர வேண்டுமா! சேர நாட்டுத் தமிழருக்கும் பாண்டி நாட்டுத் தமிழருக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது? இருவர் பேசுவதும் தமிழ்; இருவர் உடலில் ஒடுவதும் தமிழ்க் குருதி, இருவர் பண்பாடும் தமிழ்ப் பண்பாடு. ஐயோ! இவர்களிடையில் பகைமை எங்கிருந்து முளைத்தது? தமிழ்ப் பண்பாட்டினுள் முரண் ஏற்படுவதா! திங்களுள் தீத் தோன்றுமா? குளத்துள் குவளை வேகுமா? ஏனோ இந்தப் போர்! என் மனம் கலங்குகிறதே!

தமிழ் வளர்த்த பாண்டிநாட்டைச் சேரர் புகுந்து அழிப்பதா? -

மா. மரு என்ன வியப்பு: கல்லாடரே, என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்? தமிழ் வளர்த்த பெருமை பாண்டி நாட்டிற்கு மட்டுந்தானா உண்டு? புலன் அழுக்கற்ற கபிலரும் போற்றும் தமிழ் மன்னரைப் பெற்றதல்லவா சேரநாடு ? ஆ! பதிற்றுப்பத்து முழுவதும் சேரர் புகழ் பாடும் நூல் அல்லவா? பதிற்றுப்பத்தைப் பெற்ற அரசர்கள் தமிழ் வளர்க்கவில்லை எனில், பிறகு யார்தாம் தமிழை வளர்த்தவர்? இரும்பொறை அறிவு மழுங்கின தற்காக எத்தனை தமிழர் பலியாவது?