பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 169 கல்லா : புலவர் ஏறே, என்ன ஆயினும், வந்த போரை ஏற்று நாட்டைக் காத்தலே அரசன் கடமை. மா. மரு எந்த நாட்டை யார் காப்பது? தமிழ்ப் பாண்டி நாட்டிற்கும் தமிழ்ச் சேர நாட்டிற்கும் பகைமை ! தமிழ்ப் பாண்டியனோடு தமிழ்ச் சேரன் போர்புரிகிறான் ! கேட்கவும் காது மறுக்கிறது! கூறவும் நா நடுங்குகிறது! தமிழனைத் தமிழன் பகைத்துப் போர் புரியும் இந்தக் கொடுமை என்று தமிழ்நாட்டை விட்டு நீங்குமோ அறியேன்! கல்லா ஆம்! கொடுமை என்பதை நானும் உணர்கிறேன். ஆ! அதோ சேரன் வேல் எடுத்துக் கொண்டு நம் அரசரை நோக்கி விரைகிறான்! (சேரன் ஓடிவந்து வேலால் பாண்டியனை எறிகிறான். ஆண் உடையில் வேண்மாள் அதனைத் தன் மார்பில் ஏந்துகிறாள்.) நெ. செ : அட பேதாய், வந்துவிட்டான் வேலால் எறிய! ஆ! இவன் யார்? விரைவாக வந்த வேலை வீரன் தன் மார்பில் தாங்காமல் இருந்தால், என் கதி என்னவாகி இருக்கும்! வீரனே, பாண்டி நாட்டின் சென்ற உயிரை மீட்டுத் தந்த நீ யார்? நல் : ஆ! அரசே என் சொல்லைக் காப்பாற்றிவிட்டேன்! இந்த ஆண் வேடம் என்னை மறைத்துவிட்டதா? நெ. செ - (வருத்தமும் கோபமும் கொண்டு ஆ! இது என்ன புதுமை! வேண்மாளா? இங்கு எப்படி வந்தாய் கண்ணே? ஐயோ! இந்தக் கோலத்திலா உன்னைக் காண வேண்டும்! நல் : அரசே என் உண்மைப் பெயர் வேண்மாள் அன்று. வேலால் உங்களை எறிந்த சேரருக்கு ஒரே மகள் நான். என் பெயர் நல்லினி.