பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • செழியன் துறவு

நெ. நல் : நல் நல் : செ : ஐயோ! காதலி! பல நாள் உன் வருகைக்குக் காத்திருந்த பலன் இதுதானா? அரசே போரைப்பற்றிய தகவல் அனுப்ப முயன்ற என்னை என் தந்தையார் தடுத்துவிட்டார். வேறு வழி இல்லாமல் அவர் புறப்பட்ட பிறகு, எவரும் அறியாமல் நான் தனியே புறப்பட்டு வந்தேன். செ : அன்பே, தனியே வந்து தனியாகவே புறப்பட்டு விட்டாயா! என்னை அன்றும் பிரிந்தாய்! இன்றும் பிரிந்துவிட்டாயா! தலைவரே, இறப்பதாயினும் உங்களிடம் வந்து தான் இறப்பேன் என்று அன்று சிறைக்கூடத்தில் கூறவில்லையா? என் சொல்லை நிறைவேற்றி விட்டேன்! இப் பிறவியில் உங்களுடன் வாழும் பேறு எனக்குக் கிட்டவில்லையாயினும், மறு பிறவி யிலாவது உறுதியாக உங்களையே அடைவேன்! உங்கள் முன்னிலையில் என் உயிர் பிரிவதுபற்றிப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! செ : காதலி, உன் தந்தையின் கையினாலா நீ இறக்க வேண்டும். ஈதென்ன கொடுமை! இனிப் பேச எனக்கு வலியில்லை. தமிழர் தம்முள் சண்டையிட்டு மடியும் முட்டாள்தனத்தின் முடிவு, மகளைத் தந்தை கொல்வதுதான். சென்று வருகிறேன். (அவன் மார்பில் நல்லினி சாய்ந்து உயிர்விடுகிறாள்) . செ ஆ! காதலி நீயே சென்றுவிட்ட பிறகு நான் துணையற்றவனாய் இங்கு இருந்து ஆக வேண்டுவது என்ன? இதோ நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்! தந்தை மகள்மேல் எறிந்த வேல் என்னையும்.