பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 171 மா. மரு : அரசே, பொறுத்தருள்க! இஃது என்ன முறை? சாதாரண மனிதர் இச் செயலுக்குத் துணியலாம். ஆனால், அரசராகிய நீங்கள். பிறர்பொருட்டு வாழவேண்டிய நீங்கள். (வீரர் கூட்டம் வெற்றி! வெற்றி!' எனக் கூக்குரலிட, முரசும் சங்கும் முழங்குகின்றன) நெ. செ : இந்த வெற்றியால் எனக்கு என்ன பயன்? காதலை இழந்த எனக்கு நாடு கிடைத்துப் பயன் என்ன? வெற்றியின் பயன் இதுவானால், இந்த வெற்றியே வேண்டா! மா. மரு : அரசே, அரண்மனை செல்வோம். பிறகு பேச வேண்டுவனவற்றைக் கவனிப்போம், வருக! அங்கம்-III காட்சி-3 (பாண்டியன் அரண்மனையில் ஒரு தனி அறை. செழியன் உலகத்தையே இழந்துவிட்டவன் போலத் தாடையில் கையை வைத்துக்கொண்டு எல்லைமீறிய வருத்தம் முகத்தில் தோன்ற அமர்ந்திருக்கிறான். அவனோடு சமமான ஆசனத்தில் கவிஞர் மாங்குடி மருதனாரும், கல்லாடனாரும் கவலை தேங்கிய முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்) மா. மரு : அரசே முற்றக் கற்று முழுதுணர்ந்த நீங்கள் இவ்வாறு இருந்தால் நாடு என்ன ஆவது? நெ. செ : நான் எவ்வாறு இருக்கிறேன்? நன்றாகத் தானே இருக்கிறேன்? அரச அலுவல்களில் ஒன்றும் குறை நேராமல் பார்த்துக்கொள்கிறேன். வேறு என்ன வேண்டும்? மா. மரு : அரசே, ஒன்றிலும் மனம் பற்றாமல் இருக்கிறீர்கள். பல சமயங்களில் உணவு உண்பது கூட மறந்துவிடுகிறது உங்கட்கு. இப்படி மனம் சோர்ந்து