பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 செழியன் துறவு போயிருப்பதைப் பிற அரசர் கேட்டால் என்ன ஆகும்? நெ. செ : என்ன ஆனால் எனக்கு என்ன? மா. மரு : அரசே, உங்களுக்காக நீங்கள் வாழவில்லை. நாட்டுக்கு யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடன் நெ. செ : நான் மனம் மாறவேண்டுமானால், ஒரே ஒரு வழிதான் உண்டு. கல்லா : அரசே, எத்தகைய கடினமான செயலாயினும், அதனைச் செய்து உங்கள் மனத்தை மாற்றிக் கொள்ளவே விரும்புகிறோம். х நெ. செ நீங்கள். சொல்வது சரி, கல்லாடரே. ஆனால், மாங்குடி மருதனார் அந்த வழியை விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன். கல்லா : அதுபற்றிக் கவலை இல்லை. கவிஞர் மருதனார் உங்கள் நலத்தில் கருத்துக் கொண்டவர். ஆகவே, அவர் மாறுபாடு சொல்ல மாட்டார் என்னும் உறுதி இருக்கிறது எனக்கு. . மா. மரு : அரசே, உங்கள் கருத்து என்ன என்பதை அறியாமல் நான் எவ்வாறு உறுதி கூறுவது? நெ. செ : புலவர்களே இறந்த என் காதலியை நினைத்து என் மனம் பெரிதும் வருந்துகிறது! மா. மரு : எல்லாம் கற்ற உங்கட்கு யாம் என்ன கூறுவது? நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு p? என்று அறநூல் கூறியதை மறந்தீர்களா? . Tसि, 85 0, குறள், 336