பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 செழியன் துறவு மா. மரு : ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைக் காக்கத்தான் விரும்புவாளே தவிர, அவன் போர்க்களத்தில் இறப்பதை விரும்பமாட்டாளே! நெ. செ ஆம். நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும், என் மனம் அமைதி அடையவில்லையே! நாளை இதுபற்றி ஆராய்வோம். அங்கம்-III காட்சி-4 (சேரன் இரும்பொறையின் அரண்மனையில் ஒர் அறை. இரண்டு இருக்கைகள் உள்ளன. ஆனால், அரசன் இரும்பொறை இருக்கையில் அமராமல், குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருக்கிறான். இடப்புறம் ஒரு மேஜையின்மேல் குடிக்கும் பித்தளைப் பாத்திரமும், மூடி இடப்பட்ட சீசாப்போன்ற ஒரு பாத்திரமும் இருக்கின்றன) இரும்பொறை : (நடந்துகொண்டும், சில சமயம் நின்றும் தனியே பேசுகின்றான் ஆ! என்ன அவமானம்! சேரமான் கணைக்காால் இரும்பொறையின் மரபில் வந்தவனா நான்! உலகம் எள்ளி நகையாடுகிறதே! சோழனிடம் அவரும் தோற்றார்! பாண்டியனிடம் யானும் தோற்றேன்! அவரும் சிறைப்பட்டார்! யானும் சிறைப்பட்டேன்! ஆனால், என்ன வேற்றுமை ? பகைவனிடம் தண்ணtர் வேண்டும் என்று கேட்டு வாங்கி அருந்துதல் மானம் இழந்த செயலாக எண்ணிய அவர் எங்கே, பெண் வேடம் தரித்துப் பெற்ற மகளைச் சிறையில் தவிக்க விட்டு வந்த நான் எங்கே! தண்ணீரை அருந்தாமல் அரிய உயிரை விட்ட அவரும் சேரமன்னன்! மகளைக் கொன்றுவிட்டு இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிற யானும் சேரமன்னன்! ஐயோ! அவர் மரபில் வந்தவன் என்று கூறிக்கொள்ளவும் அவமானமாய் இருக்கிறதே!. 'மயிர் நீப்பின்