பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 17 வாழாக் கவரிமான்' அன்ன இரும்பொறை எங்கே, நான் எங்கே? இந்த அவமானத்தை எவ்வாறு போக்கிக்கொள்வது? பழிவாங்குதல்தான் சிறந்த வழி! பாண்டியனைக் கொன்று அவன் குலம் இல்லாமல் செய்துவிட்டால் ஒருவேளை என் பழி மறைந்துவிடும்! நேற்றைக்குப் பிறந்தவன் அவன்! அவனிடம் எத்தனை முறை தோற்பது? இன்னும் ஒரு முறை அவனை.................. ஆ! என்ன பேதைமை ! சோழன் உதவியும், சிற்றரசர் ஐவர் உதவியும் இருந்துங்கூட அவனை ஒன்றுஞ் செய்யமுடிய வில்லை. இனி என்ன செய்யமுடியும்? ஐயோ! அந்தச் சிற்றரசர்கள் இனி எவ்வாறு என்னை மதிப்பார்கள்: இப்படி வாழ்ந்துதான் என்ன பயனைக் காணப் போகிறேன்! என் கண்மணி நல்லினி போனபிறகு எனக்கு இவ்வாழ்க்கையில் வேறு என்ன இன்பம் இருக்க முடியும்! நல்லினி, நல்லினி, ஆண் குழந்தை அல்லையாயினும், உன்னை ஆணாக மதித்து வளர்த்து, போர்ப் பயிற்சி அனைத்தும் செய்வித்து. என் கையாலேயே. ஆ! இனி எனக்கு அமைதி தரத் தக்கது சாவு ஒன்றுதான்! சாவே, வா! உன்னை விரும்பி அழைக்கிறேன்! ஆனால், வீரனைப்போல வாளால் மடிய எனக்கு வாய்ப்பு இல்லை; பேடியைப்போல இந்த நஞ்சை அருந்தி.ஆம்! இதுதான் வழி! என்னைச் சூழ்ந்த பழியும் என்னுடனேதான் நீங்கும் இதோ: - (சிறு பாத்திரத்தில் நஞ்சை ஊற்றி வாயின் எதிரே கொண்டு செல்கிறான்.) நல்லினி, நானும் உன்னிடம் இதோ வந்து விடுகிறேன்! கண்ணே, என்னை விட்டு உன்னைப் பிரித்த அக் 1. குறள், 969