பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ல் செழியன் துறவு - (காவலன் வெளிச்செல்கிறான்) என்ன புதிய செய்தி கொண்டுவருகிறானோ!' (ஒற்றன் உள்நுழைந்து வணங்குகிறான்) ஒற்றன் : சேரமன்னர் வாழ்க! விற்கொடி உயர்க! இ. பொ : நல்லது பாண்டி மன்னன் எவ்வாறு இருக்கிறான்? ஒற் : அரசே, பாண்டித் தலை நகராகிய மதுரை, களை இழந்து காணப்படுகிறது; செழியர் அரச அவைக்குக்கூட வருவதில்லை; பிற நாட்டுத் துதுவர் வந்தாற்கூட அவருடன் பேசுவதில்லை. அரசியல் முழுவதையும் அமைச்சர் வீரபாண்டியரும் புலவர் மாங்குடி மருதனாருமே கவனிக்கின்றனர். இ. பொ : என்ன வியப்பு: செழியனுக்கு நோய் ஏதாவது கண்டிருக்கிறதா? காரணம் ஒன்றும் தெரியாதா? ஒற் : தெரியாமல் என்ன சொல்லத்தான் மனம் வரவில்லை. இ. பொ : தாராளமாகக் கூறலாம். ஒற் : நம் இளவரசியாரை அவர் காதலித்தாராம். இளவரசியார் இறந்ததிலிருந்து அவர் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறாராம். பல சமயங்களில் உணவுகூட உண்பதில்லையாம். இ. பொ : சரி, நீ போகலாம். r (ஒற்றன் வணங்கி விடை கொள்கிறான்) பல நாள் காத்திருந்த எனக்கு அரிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது! இனிப் பழிக்கு அஞ்சேன்! வி. கோ.: என்ன கூறுகிறீர்கள்? ஒன்றும் விளங்கவில்லையே! இ. பொ : சேரன் பாண்டியனிடம் தோற்றான் என்ற பழி இல்லாமல் இம் முறை அவனை வென்று.