பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 9 181 குறு. விடுகிறேன்! அவன்மேற் கொண்ட பழியையும் தீர்த்துக்கொள்கிறேன்! - கிழார் : இரும்பொறை, இஃதென்ன அறியாமை? இப்பொழுது மட்டும் பாண்டியனை வெல்ல என்ன அதிகமான வாய்ப்புக் கிடைத்துவிட்டது? ஏன் திடீரென்று இம் மனமாற்றம்? } இ. பொ : புலவரே, இதைவிட வேறு அரிய வாய்ப்பு குறு. எப்பொழுது கிடைக்கும்? பாண்டியன் கவலையில் தன்னை மறந்து இருந்தால், பாண்டி நாடு கேட்பார் அற்று இருக்குமல்லவா? ஆகையால், இதுவே நல்ல நேரம்! - கிழார் : அரசே, நீங்கள் பாண்டியன் சிறையில் இருந்தபொழுது நம் நாடு கேட்பார் அற்றா இருந்தது? வில்லவன் கோதை நமது நாட்டைக் காத்ததுபோல அங்கு வீரபாண்டியன் இருக்கிற்ான் என்பதை மறக்க வேண்டா. بر கோ : நமக்கு ஒரு குறுங்கோழியூர் கிழார் கிடைத்ததுபோலப் பாண்டியருக்கும் ஒரு மாங்குடி மருதனார் இருக்கிறார் என்பதும் நினைவில் இருத்த வேண்டிய ஒன்று! அவ்வாறு இருக்க, படை எடுத்தல் என்பது. . . . . . . இ. பொ : அமைச்சரே இம் முறை நான் நன்கு ஆராய்ந்து முடிவு செய்துவிட்டேன். போருக்குப் போவது உறுதி! ஒன்று வெற்றி, அன்றேல், போர்க்களத்தில் வீர மரணம்! உடனே ஒரு தூதனை அனுப்பிப் பாண்டிப் பதரைப் போருக்கு வரச்சொல்லி ஆணை இடும். குறு. கிழார் : இரும்பொறை, உமது அருமகள் நல்லினியின் காதலால் தம்மை மறந்து இருக்கும் நெடுஞ்செழி யருடன் போர் செய்ய இதுதானா தக்க நேரம்? நன்கு