பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ) செழியன் துறவு ஆய்ந்து பாரும். நல்லினிக்காகவாவது இம்முறை செல்வதை நிறுத்தி விடுக. . இ. பொ : நிறுத்தவாவது! இத்தகைய சமயம் இனி வாராது: அங்கம்-III காட்சி-5 - (பாண்டியன் அவைக்களம். நடுவே உயர்ந்த அரசனுடைய இருக்கையும், அதன் பக்கத்தில் மருதனாருக்கு ஒர் இருக்கையும் இருக்கின்றன. அரசன் இருக்கைக்கு எதிரே பல இருக்கைகள் இருக்கின்றன. ஆசனங்கள் பழங்காலத்து ஆசனங்களாகவே இருக்கின்றன. அரசன்மட்டும் தன் இடத்தில் அமர்ந்திருக்கிறான். புலவர்கள் உள்ளே நுழையும் பொழுது, காட்சி தொடங்குகிறது . . (புலவர் கூட்டம்) மா. மரு : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியர் வாழ்க! புலவர்கள் : வாழ்க! வாழ்க! : நெ. செ : புலவர்களே, வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! ஒரு புலவர் : அரசே உமது கொற்றம் உயர்க! எம் தலைவர் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி' என்ற அரியதொரு பாடலைப் பாடிவந்துள்ளார். அதன் அரங்கேற்றம் இப்பொழுது நடைபெற வேண்டும். நெ. செ : மதுரைக் காஞ்சியா? காஞ்சியாவது நிலையாமை பற்றிக் கூறுவதல்லவா? * ஒ. புல ஆம் அரசே, உலகமும் மதுரையும் நிலையாமை உடையவை என்று கூறி, எம் தலைவர் உங்கட்கு உறுதிப் பொருள் சில கூற விரும்புகிறார். நெ. செ நல்லது மருதனாரே, நீங்கள் பாடினால் கேட்க யாம் சித்தமாய் உள்ளோம். கூறியருள்க!