பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 187 மா. மரு அத் துறை என்ன என்பதை அறியலாமா? நெ. செ : காலம் வரும்பொழுது கூறுவேன். (காவலன் வருகிறான்) காவலன் : வாழ்க செழிய மன்னர்! அரசே, வணக்கம்! சேர நாட்டுத் தூதுவன் ஒருவன் வாயிலில் வந்து காத்திருக்கிறான். நெ. செ : நல்லது வரச்சொல். தூதுவன் வருகிறான்) . சே. தூதுவன் : அரசே, வணக்கம்! மூவேந்தருள்ளும் தலைமை வாய்ந்தவரான எம் மன்னர் சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஒரு செய்தி விடுத்துள்ளார். உங்கட்கு. நெ. செ : எப்பொழுது உம் அரசர் இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்? தலையாலங்கானத்தில் தோற்ற பிறகா, அல்லது முன்னமேயா? - சே. துர : அரசே, எதிர்பாராத காரணத்தால் எம் அரசர் தோற்றுவிட்டமையின், உங்களைத் தருக்குக் கொள்ள வேண்டா என எச்சரிக்கிறார். - . நெ. செ : அட பேதையே! பிறகு என்ன? சே து : "தலையாலங்கானத்துச் செருவென்ற என்ற அடை மொழியை நீங்கள் இனிப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறச் சொன்னார். • * நெ. செ : வெடிப்புச் சிரிப்புடன் ஏன்? பயன்படுத்தினால் என்ன? . * சே. து: ; உடனே போருக்கு வருவதாகக் கூறினார். நெ. செ : போருக்கு இரண்டுமுறை வந்து தோற்று ஓடின அறிவிலி-தன் ஒரே மகளைக் கொன்ற பாதகன்