பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. மா. ԱՈtքս Ա}T: நெ. 186 செழியன் துறவு நெ. செ : நினைந்து பார்த்தால் ஒன்றுமில்லைதான். மா. மரு : இப்படியே வாழ்நாள் கழிந்துவிட்டால் முதுமைப் பருவத்தில் மன வருத்தம் அடைய நேரிடும் அல்லவா? - செ முயன்று பார்க்கிறேன்! இன்னும் இளமை மாறவில்லையாகலின், வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்றே எண்ணு கிறேன். மரு மாற்றி அமைத்துக்கொள்ள முயலுவதற்கு முன்னர் எந்த வழியில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர் ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும்." செ : எவ்வாறாயினும், நீங்கள் கூறிய முறையில் வரைந்து பெற்ற வாழ்நாளை இன்பத்தில் கழிக்க என் மனம் ஒருப்படவில்லை! காதலை இழந்த மனம் வேறு துறையில் இன்பத்தை அடையமுடியும் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மரு : அரசே, பின்னர் மதுரைக் காஞ்சி உங்கள் அகக் கண்ணைத் திறந்ததாகக் கூறியதன் நோக்கமென்ன? செ : ஆம்! அப் பாடல் என்னைத் தட்டி எழுப்பியது உண்மைதான். ஆனால், விழிப்படைந்த யான், நீங்கள் கூறும் முறையில் கவிதைப் பொருளை நினைக்க வில்லை. அவ்வளவு அரிய செயலைச் செய்த நம் முன்னோரும் இன்று இருந்தவிடம் தெரியாமல் மாய்ந்தனர் அல்லவா? - மரு ஆம்! அதனால் என்ன? செ : என்னவா! இவ் வாழ்க்கையைப் பெற்றதன் பயனை அவர்கள் அடையவில்லை என்றே நினைக்கிறேன். எனவே, யான் வேறு துறையில் அப் பயனை அடைய முற்படப் போகிறேன்.