பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 185 LüᎥᎢ . ԼՌքr, ԼՈIT நெ. ԼՈT. நெ. IDEC, மரு : ஏன்? நல்ல அறிவாளிகள் கூட்டுறவில் அறிவையும் மனத்தையும் செலுத்தலாமே ? உம்முடைய முன்னோர் செய்த செயல்தானே அது? செ : உண்மைதான். ஆனால், காதலை இழந்த மனம் மற்றோர் உணர்ச்சி உலகைத் தேடுமே தவிர, அறிவுலகில் ஆனந்திக்க இடம் தருவதில்லையே! மரு : அப்படியானால், நன்றாக உண்டு உடுத்து இருப்பதும், உணர்ச்சி உலகில் வாழ்வதுதானே! பாடலின் இறுதிப் பகுதி அதைத்தானே உணர்த்துகிறது? செ : காதலுக்கும் போருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டுபோலும்! ஆதலாலேதான் இரண்டின் மேலும் என் மனம் ஓயாது சென்றது. மரு ஆம் அரசே, அதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இரண்டின் இறுதியிலும் ஆசை அடங்குவ தில்லை. தீர்க்க முடியாத பேராவலைத் துரண்டி வாழ்க்கையைப் பயனற்றதாகச் செய்யும் இயல்பு காதலுக்கும் போருக்கும் உண்டு. - செ : அப்படியானால், இவை இரண்டும் தள்ளப் பட வேண்டுவனவா? ... . . . - - மரு அல்ல அரசே! இவை அளவோடு நின்றால், வாழ்க்கையில் சுவை உண்டாக்குபவை; ஆனால், அளவில் மிகுந்தபொழுது நெருப்பைப்போலப் பெருந் தீங்கு உண்டாக்கும். செ : அவ்வாறானால், என் வாழ்க்கையில் இவை இரண்டும் அளவின் மிஞ்சிவிட்டன என்று கூறுகிறீர்களா? - மரு : ஆம் அரசே! நீங்கள் பிறந்தது முதல் போர்கள் நிகழ்த்தியது தவிர வேறு புகழுடைய செயல் என்ன செய்தீர்கள்?