பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 • செழியன் துறவு அரியதந்து குடியகற்றிப் பெரியகற்று இசைவிளக்கி முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீன் நடுவண் திங்கள் போலவும் இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்தினிது உறைமதி பெரும ! வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே.' நெ. செ : ஆ! புலவர் ஏறே, என் அகக் கண்களைத் திறந்துவிட்ட உங்கட்கு யான் என்ன கைம்மாறு செய்யவியலும்! மா. மரு : நீங்கள் வாழ்க்கையின் உண்மைப் பயனைக் காணாமல், ஓயாமல் போர்புரிவதையே தொழிலாகக் கொண்டால், என்ன ஆவது? நெ. செ ஆவது என்ன! நீங்கள் கவிதையில் கூறியபடி கடல் மணல் போன்ற மன்னர் கூட்டத்தில் யானும் ஒருவனாக மடிந்து மட்கியிருப்பேன். மா. மரு : ஆம்! ஆனால், என்னுடைய செழியர் அவ்வாறு மட்கிப்போக யான் பொறுக்க மாட்டேன்! நெ. செ : மருதனாரே, உங்கள் கவிதையைக் கேட்ட பிறகுதான் வாழ்க்கையில் போரைத் தவிர வேறு பயன்களும் உள்ளன என்பதை உணருகிறேன்! ஆனால். - மா. மரு : என்ன! ஆனால்' என்று இழுக்கிறீர்களே: நெ. செ. வேறு ஒன்றுமில்லை; போரில் செல்லும் மனத்தை அடக்கிய பிறகு அதனை எங்கே செலுத்துவது என்பதுதான் நன்கு விளங்கவில்லை.