பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 189 விடுவதா? தலையாலங்கானத்துச் செருவென்ற நமது வீரம் எங்கே? நெ. செ : என்ன வீரபாண்டி! போர் செய்தால்தான் வீரம் வெளிப்படுமா? வி. பா : பின்னர் எப்படிப் பகைவனை நாட்டைவிட்டு ஒட்டுவது? . நெ. செ : போரைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லையா? வீ. பா : ஐயோ! பாண்டி நாடு இந்தக் கதிக்கா வர வேண்டும்! எந்த நேரத்தில் கவிஞர் மதுரைக் காஞ்சியைப் பாடினாரோ, அந்த நேரத்தில் மதுரைப் பெருமை அழிய வேண்டுமா? நெ. செ : என்ன உளறுகிறாய் வீரபாண்டி? வீ. பா : அரசே அவர் அந்தப் பாழும் பாடலைப் பாடியிராவிட்டால், நீங்கள் இப்படி மனம் மாறி விடுவீர்களா? நெ. செ அமைச்சரே, வையத்துள் வாழ்வாங்கு வாழ வகை தெரியாதிருந்த என்னைக் கவிஞர் கைகொடுத்து நல்வழியில் செலுத்தினார்; கொலையை அன்றி நன்னெறி அறியாதிருந்த என்னை அறநெறியில் செலுத்தினார். இதில் தவறு என்ன? வீ. பா : அறநெறியைப் பற்றி எனக்கு இப்பொழுது கவலை இல்லை. பகைவனை என்ன செய்வது என்பது தான் ᎧaᎢ6Ꮘ ᏜᏚóföó©. நெ. செ : அமைச்சரே! அஞ்ச வேண்டா. யானே அமர்க்களம் செல்கிறேன். வீ. பா : அரசே வாழ்க நும் கொற்றம்! இதோ படைகளை அணிவகுத்து நிற்க ஆணை இடுகிறேன்.