பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 செழியன் துறவு நெ. செ : வேண்டா படைகள் எதற்கு? நான் அமர்க்களம் செல்வது மறப்போர்புரிய அன்று; அறப் போர் புரியவே ஆகும். வி. பா : ஆ! என்ன கூறினர்கள்? படைகள் இல்லாமல் அமர்க்களம் செல்வதா? நெ. செ நீர் கூறும் காலாட்படை, யானைப்படை முதலியன வேண்டா என்றேன். ஆனால் என்னிடம் படைகள் உள்ளன? வீ. பா : என்ன அரசே, விளையாட்டு நேரமா இது? நெ. செ : அன்று அமைச்சரே உறுதி என்னும் யானையில் ஏறி, பொறுமை என்னும் தேர்ப்படை உடன் வர, நல்லெண்ணம் என்னும் குதிரைப் படை முன்னே செல்ல, பிழை பொறுத்தல் என்னும் காலாட்படை பின் வரச் செல்லப் போகிறேன். வெற்றி நமதே. வீ. பா : அரசே! நெ. செ : அஞ்சவேண்டா என்பொருட்டு. இதோ மீண்டு விடுகிறேன். - அங்கம்-III காட்சி-7 (பழைய போர்க்களம். சில வீரர்களுடன் சேரன் இரும்பொறை மட்டும் அரங்கின் நடுவில் நிற்கிறான்) துரத்தில் குதிரையின் குளம்பு ஒலி கேட்கிறது) இ.பொ ! என்ன புதுமை! பாண்டிப் படை ஒன்றையும் காணவில்லையே! அதோ ஒற்றை ஆளாகக் குதிரை ஏறி வருபவன் யார்? . வீரன் : அரசே அவரே பாண்டி மன்னர் நெடுஞ்செழியர். இதோ நெருங்கிவிட்டார். . (நெடுஞ்செழியன் இரும்பொறை எதிரே வருகிறான்) - ... . .