பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 செழியன் துறவு நெ. செ : நீர் என்ன கூறினும் சரி. மனிதனை மனிதன் கொல்லும் செயலுக்கு இனி நான் சம்மதிக்க மாட்டேன். இ. பொ : அரசருடைய கடமையல்லவா இது? நெ. செ : ೯೩ು? கொல்லுவதா? (சிரிக்கிறான்) ஓர் உயிரை உண்டாக்கத் தெரியாத அரசனுக்குக் கொல்லமட்டும் உரிமை கிடைத்துவிட்டதா? இ. பொ : என் மகள் இதையா உன்னிடம் கூறினாள்? நெ. செ : வாயால் கூறவில்லை; தன் செயலாற் செப்பிவிட்டாள். இ. பொ : என் செப்பிவிட்டாள்? நெ. செ : தன் தூய அன்பினைக் காப்பாற்ற உயிரையே தந்த பெருந்தகைமை பெற்ற அவள் அன்பின் சிறப்பை நிலைநாட்டிவிட்டாள். இ. பொ ! இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? நெ. செ : போரால் உலகை வெல்ல முயன்ற என்னை, அன்பால் அவள் வென்றுவிட்டாள்! அன்பால் எல்லாம் நடைபெறும் என்பதை மெய்ப்பித்து விட்டாள் அல்லவா? . இ. பொ : இப்பொழுது நான் உன்னைச் சிறை செய்தால் என்ன செய்வாய்? * நெ. செ: என் காதலி எனக்கு அறிவுறுத்திய அன்பு வழியை, அவளைப் பெற்று வளர்த்த நீர் அறியாமலா இருப்பீர்? . இ. பொ : அறியவில்லையாயின்: க. செ அவளோடு சில நாழிகைகளே பழகினேன். ஆனால், பல ஆண்டுகள் அவளை வளர்த்தும் நீர்