பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 9 193 திருந்தவில்லை என்றால் அவளைப் பெற்றும் பெறாத வரேயாவிர். இ. பொ : (சற்று ஆழ்ந்து சிந்தித்து நெடுஞ்செழிய, நீ கூறுவது உண்மைதான். எனக்கும் அகக்கண் திறந்துவிட்டது உன்னால். ஆ! யான் என்ன தீய காரியம் செய்யத் துணிந்தேன்! செ : நீரும் நானும் தவறாகப் பகைமை பூண்டு அதற்காக ஒரு பகைமையும் இல்லாத இந்தச் சேர, பாண்டிய மக்கள் ஆயிரக் கணக்கானவரைக் கொல்வது எவ்வளவு தவறு? இ. பொ ஆம்! உண்மைதான்! இனி என்ன செய்ய வேண்டும்? நெ. செ : செய்வது என்ன? நீர் வேண்டுமானால் இப் பாண்டி நாட்டையும் சேர்த்துக்கொண்டு ஆட்சி செய்யும். எவ்வாறாயினும், சேர, பாண்டிய மக்கள் தமிழர்களே. நீர் ஆட்சி செய்தலும் யான் ஆட்சி செய்தலும் ஒன்றுதான். ஆனால், கேவலம் நிலங் காரணமாகவோ அன்றி வேறு காரணங்கொண்டோ மற்றொரு தமிழ் மன்னனுடன் பகைத்துத் தமிழ்க் குருதியைச் சிந்தவேண்டா. இதுவே எனது வேண்டுகோள். என்னைப் பொறுத்தவரை என் பிழைக்கு இரங்கி இப்படியே வடக்கிருக்கப் போகிறேன். - இ. பொ : அரசே, ஏன் வடக்கிருக்க வேண்டும்? நெ. செ : இதுவரை அறியாமையில் மூழ்கி ஆயிரக் கணக்கானவரைக் கொலை செய்ததற்கும், உயிரினும் இனிய காதலி மாளக் காரணமாய் இருந்ததற்கும் கழுவாயாக வடக்கிருக்கப் போகிறேன்.