பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 201 காட்சி 4 (கடைவீதி : தனகோடி செட்டியார், தனதத்தன்). தனகோ : என்ன் தனதத்தரே, மருமகன் வாணிகம் செய்கிறேன் என்று போனவன் இத்தனை ஆண்டு களாக வாராதிருப்பானேன்? ஏதாவது தகவல் கிடைத்ததா? தனதத் : என் மருமகன் பரமதத்தன் பாண்டி நாட்டில் கொற்கைப் பதியில் தங்கிப் பெரிய வியாபாரம் நடத்துகிறானாம். தனகோ : அட பைத்தியக்காரரே, இதற்கா இவ்வளவு கவலைப்பட்டீர்? - தனதத் : வாணிகம் செய்வதில் தவறு இல்லை. ஆனால், அங்கு அவன் குடும்பமே நடத்துவதாக அல்லவா தகவல் வந்துள்ளது! தனகோ : தனதத்தரே, கவலைப்படவேண்டா. நான் இதற்கொரு வழி செய்கிறேன். அதிருக்கட்டும். புனிதவதிக்கு இச் செய்தி தெரியுமா? அவள் என்ன நினைக்கிறாள்? ... - مه سار - தனதத் ஆம் ஐயா, அதுபற்றிக்கூட உங்களைக் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆதி யிலிருந்தே புனிதவதி ஒரு விநோதமான பெண். அவளையொத்த பெண்கள் மணல் வீடு கட்டி விளையாடும்பொழுது அவள் மட்டும் தனியே இருந்து கோயில் கட்டி விளையாடுவாள். அப்பொழு தெல்லாம் இதில் நான் ஒன்றுத் தவறு காணவில்லை. தனகோ : பாவம்! பெண்ணைப் பெற்று வளர்த்திரே தவிர, அவளை இன்னும் அறிந்துகொள்ளவில்லை. தனதத் : கணவன் போனதுபற்றி அவள் கவலைப்படு வதாகவே தெரியவில்லை. அதுதான் புதுமை.