பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புனிதவதி புனித : இறைவன்மேல் ஆணை! நான் கூறுவது முற்றிலும் உண்மை! பரம உன் ஆணையைக் கண்டு இது நம்பக்கூடியதாக புனித பரம இல்லை. நீ கூறுவது உண்மையானால், இறைவன் அருளால் இன்னும் ஒரு பழம் வரவழைத்துக் கொடு பார்க்கலாம்! போ, கொண்டுவா, சீக்கிரம்! (தாழ்ந்த குரலில் அடியார் துயரம் பொறாத அண்ணலே, ஈங்கு எனக்கு மற்றொரு பழம் அளியாது போனால் என் உரை பொய்யாகிவிடும். (புனிதவதியார் கையில் ஒரு மாம்பழம் வந்து விழுகிறது. அம்மையார் பாடுகிறார்) 'பிரான்என்று தன்னைப்பன் னாள்பரா வித்தொழு வார்இடர்கண்டு இரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப் பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்துறைவாய் அராநின்று இரைக்கும் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே." புனிதவதி, என்ன, பாடிப் பழஞ்சம்பாதிக்கப் பார்க்கிறாயா? ஆ! இது என்ன ! பழமா! பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக இருக்கிறதே! எங்கே, என் கையில் கொடு பார்க்கலாம்! என்ன அதிசயம்! யான் காண்பது கனவா! உன் கையிலிருந்து என் கையில் விழுந்ததும் இருந்தது. ஆனால், அதைச் சுவைக்க வேண்டும் என்று வாய்க்குக் கொண்டு போனவுடன் மறைந்து போவானேன்! இதுதான் இறைவன் திருவருள் என்பதா! இது என்ன புதுமை புனிதவதி: புனித : எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!