பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 4 199 சரி. இது என்ன பழம்? நல்ல குரலில் மாம்பழந்தான். என்றாலும் நான் அனுப்பிய இரண்டில் மீதம் இருந்ததா? இல்லை! நிச்சயமாக இல்லை! இத்தகைய மாம்பழம் மூவுலகிலும் பெறுதற்களிது! இப் பழத்தை எங்கிருந்து பெற்றாய்? - புனித : (தனக்குள் இறைவா, இது என்ன சோதனை? உன் திருவருளை வெளியிடுதலுந் தவறு. ஆனால், கணவரிடம் உண்மை கூறாதிருப்பதும் தவறு. இத் தருமசங்கடமான நிலையில் யான் என்ன செய்வேன்! : - பரம : என்ன புனிதம், யாரிடமிருந்து இக் கனியைப் பெற்றாய்? உண்மையைக் கூறு! ஏன் ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்? - புனித : (தனக்குள் பெருமானே, உன் கட்டளையை மீறி யான் தவறு செய்தாலும் மன்னிப்பாய். ஆனால், என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் மேலும் கேள்விகள் கேட்கும் இவருக்கு மெய்ம்மை கூறுவதே சிறந்தது. இறைவா, நீயே சரணம். பரம : என்ன, நான் கேட்பது காதில் விழவில்லையா? புனித . (மலர்ந்த முகக் குறிப்புச் சொல்லில் விளங்க நீங்கள் அனுப்பிய இரண்டு பழங்களில் ஒரு பழத்தை. அடியார் ஒருவருக்கு இட்டு -91(ԼԶ:5} படைத்துவிட்டேன். . . பரம ; அது சரி. இந்தப் பழம் ஏது? யார் கொடுத்தார்கள்? புனித இது இறைவன் தந்த பழம். .. பரம : என்ன புனிதவதி: விளையாடுகிறாய்? இறைவன் தந்ததா! இறைவனிடங்கூட வியாபாரம் பண்ணு கிறாய் போல இருக்கிறதே! - தெ.ந.-14