பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 புனிதவதி புனித. 2 : அவரே விரும்பிச் சென்று, கைலைமலையை அடைந்தாரா? பரம : அதற்கென்ன சந்தேகம்? கைலை மலைவரை நம்மைப்போல நடந்து சென்று அப் புண்ணிய பூமியை அடைந்ததும் காலால் நடத்தல் முறையன்று என்று கருதித் தலையால் அல்லவா நடந்தார்! புனித 2 : ஆ! அப்படியா! என்னே அவருடைய அன்பின் ஆழம்! l பரம : நீ கூறுவது முற்றிலுஞ் சரி. கைலை மலையில் சிவபெருமானுடன் இருக்கும் உமா தேவிக்கும் அம்மையாரின் அன்பு வியப்பை விளைத்தது என்றால் வேறு கூறுவானேன்? புனித. 2 : (வியந்து அப்படியா! உமையம்மையார் என்ன கூறினார்? - பரம : வியப்பு மிகுதியால் இறைவனைப் பார்த்து, 'பெருமானே, தலையினால் நடந்து இங்கு ஏறும் ஒரு பேயின் அன்பு இருந்தவாறு என்னே! என்றார். புனித 2 : அப்படியா அப்பா! என்ன ஆச்சரியம்! அதற்கு இறைவர் என்ன விடை கூறினார்? பரம : ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அரும்பெருஞ் சோதி, அம்மையாாரைத் தமக்குத் தாய் என்று கூறினாராம். - புனித. 2 : இதென்ன வியப்பு: இறைவரே தமக்கு அம்மையாரைத் தாய் என்று கூறுவதானால் அதை விடப் பெரிய பேறு என்ன இருக்கிறது? பரம : அவர் தமக்கு மட்டும் தாய் என்று கூறவில்லை அம்மா. உமாதேவியாரையும் சேர்த்துக்கூறினாராம். 'உமையே, வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண்’ என்றாராம்.