பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 4}. 209 புனித 2 : தாய் தந்தையரற்ற அத் தனி மூலப் பொருளே தாய் என்று கருத வேண்டுமானால் என் பெரிய தாயார் எத் துணைத் தவஞ் செய்திருக்க வேண்டும்! பரம இறைவர் அவரைத் தாய் என்று கருதியது மட்டுமன்றி, அப்படியே வாயால் கூப்பிடவும் கூப்பிட்டாராம்! புனித 2: ஆ! இறைவர் வாயாலும் அவ்வாறு அழைத்தாரா? பரம ஆம் அம்மா. 'அம்மே என்று இறைவர் அழைக்க, அம்மையார், அப்பா என்று மறுமொழி கூறினார். புனித. 2 : அப்பா, எனக்கு வியப்புத் தாங்கவில்லையே! இவ்வாறு பெரியம்மாள் கூற எவ்வளவு அன்பு இருந்திருக்க வேண்டும்: பரம : அடியார்களே ஒரு தனி இனம் அம்மாா. அவர் கைலையில் இருந்து வாழ்வதைக்காட்டிலும் இந்த உலகில் இருந்துகொண்டு இறைவருடைய உருவ வழிபாட்டில் கருத்தைச் செலுத்தவே நினைக்கிறார். புனித. 2 : ஏன் அப்பா அப்படி? பரம : நம்மைப் போன்ற அறியாமையுடையவர்கள், பிறப்பின் பெருமை தெரியாமையால், இது துன்பம் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால், உண்மையாக இப் பிறவி வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். புனித. 2 : அதனால் அவர்கட்குத் தீங்கு நேராதா அப்பா? பரம ; அதுதான் வியப்பு! அவர்களாக வேண்டிப் பெறும் அந்தப் பிறவியில் அவர்கள் குறிக்கோளை அல்லது லட்சியத்தை மறப்பதில்லை.